கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மது அருந்த பணம் கொடுக்காததால் தாயை அடித்துக் கொன்ற மகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநாத், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீநாத், மது வாங்குவதற்காக தாய் பைரம்மாவிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் பணம் கொடுக்க அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த ஸ்ரீநாத், தாய் என்றும் பாராமல் பைரம்மாவை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பைரம்மா உயிரிழந்த நிலையில் கொலையை ஒப்புக்கொண்டு ஸ்ரீநாத் பாகலூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.