தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாருஸ்ஸலாம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள், சேமித்து வைத்த உண்டியல் பணம் ரூ.20 ஆயிரத்தை, கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிழப்பு நிதியாக பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.
இதனை காசோலையாக மாற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரை நேரில் சந்தித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் வழங்கினர்.