புதுச்சேரியில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பெண்கள் இலைகள், பழங்கள், காய்கறிகளால் ஆன உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர். பின்னர் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.