புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் பேச்சை கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காவல் உதவி என்ற செயலியை ஆண்களும் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும், காவல்துறை மட்டுமல்லாமல் பல அமைப்புகள் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், புகார் கொடுக்க வருபவர்களின் பேச்சை கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், குற்றங்கள் தங்களுக்கு நடந்ததாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பணத்திற்காக மட்டுமன்றி பல காரணங்களுக்காக இணையவழி குற்றங்கள் நடைபெறுவதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.