விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே ஜிஆர்பி தெருவை சேர்ந்த அற்புதராஜ், கடந்த 2016ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
இதுதொடர்பான வழக்கில் அவருக்கு போலீசார் பிடிவாரண்டு வழங்கியதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அற்புதராஜ் உயிரிழந்தார். இதற்கிடையே அற்புதராஜை காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.