நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கை அவர் தனியே கண்டு ரசித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் பொது இடங்களில் தனித்தனியே தோன்றுவது இது முதல் முறையல்ல. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின்போது, அபிஷேக் பச்சன் தாய், தந்தையரோடு வந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது மகளோடு பங்கேற்றார்.