தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நான்கு நாட்கள் சாரல் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சீசன் காலகட்டத்தில் நடத்தப்படும் சாரல் திருவிழா, கடந்த ஆண்டு நடத்தப்படாததால், இந்த ஆண்டு நடத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வரும் 16 ம் தேதி முதல் சாரல் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
அந்த 4 நாட்களில் கிராமிய கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி மற்றும் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.