ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு அக்கட்சி சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த நபர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை இயக்கிய அரசியல் புள்ளிகள், பணத்தை பரிமாறியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.