வங்கதேச தலைநகர் டாக்காவில், ‘ஹரே கிருஷ்ணா’ முழக்கத்துடன் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்தது.
இந்துக்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டாக்காவில் ‘ஹரே கிருஷ்ணா’ என்ற முழக்கத்துடன் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.