கொல்கத்தாவில் சடலமாக மீட்கப்பட்ட பயிற்சி மருத்துவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரவு பணியில் இருந்த முதுநிலை 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வெளியிலிருந்து மருத்துவமனைக்குள் சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.