சீனா விண்ணில் செலுத்திய ராக்கெட் 700-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடித்து சிதறியுள்ளதால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சீன அரசுக்குச் சொந்தமான ஷாங்காய் ஸ்பேஸ்காம் சேட்டிலைட் டெக்னாலஜி நிறுவனம், 18 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள்களை செலுத்திய ராக்கெட் 700-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடித்து சிதறியுள்ளதால், இது புவியின் சுற்று வட்ட பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.