கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும், போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக அரசு, போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்களுக்கு, ஓய்வுக்கால பணப்பலனுக்காக ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
கடந்த 18 மாதங்களாக, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன் வழங்காமல் இருந்த தமிழக அரசு, தமிழக பாஜக இந்தப் பிரச்சினையை முன்னெடுத்ததும், நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
மேலும், கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும், போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வையும், உடனடியாக வழங்கும்படி, தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.