சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிச் சென்ற பெண் இன்ஜினியரை போலீசார் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மருத்துவமனை அலுவலர் எனக் கூறி அறிமுகமான பெண் ஒருவர், வெண்ணிலாவின் குழந்தையை தூக்கிச் சென்று மாயமானார்.
போலீசாரிடம் புகார் அளித்ததின் பேதில், காரிப்பட்டியைச் சேர்ந்த இன்ஜினியர் வினோதினியிடம் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கரு கலைந்துவிட்டதை மறைத்து குழந்தை பிறந்துவிட்டதாக உறவினர்களிடம் நாடகமாடுவதற்காக இன்ஜினியர் வினோதினி இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வினோதினியை போலீசார் கைது செய்தனர்.