சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் சரியாக விளையாடாத மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வட்டார அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அப்பள்ளி மாணவர்கள் சரியாக விளையாடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, விளையாட்டு தொடர்பான நுணுக்கங்களை சொல்லி கொடுத்தபடியே மாணவர்களை கடுமையாக தாக்கினார்.
இதனை சக மாணவர்கள் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் வீடியோ வைரலானது. இது தொடர்பாக மாணவர்களோ, பெற்றோரோ எந்த புகாரும் அளிக்காத நிலையில் வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.