அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக ஆயிரத்து 45 குளங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வருவாரா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார்.