திருப்பூர் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
ஹிண்டன்பர்க் நிறுவனம் முதலீட்டாளர்களை பீதி ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம். செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
அனைவரது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது, கடந்த 3 ஆண்டுகளில் சமூக இயக்கமாக மாறி உள்ளது. பிரதமர் கூறியது குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த டூவீலரில் பேரணிக்கு ஏற்பாடு செய்தோம். நாடு முழுவதும் இந்த பேரணி நடக்கிறது. ஆனால், திருப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதனை அரசு செய்ய வேண்டும், முதல்வர் சொல்ல வேண்டும். ஆனால் ஆளும் திமுக பேரணிக்கு அனுமதி மறுக்கிறது. . பா.ஜ., வாகன பேரணிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கலாம்.தேசியக்கொடியை கொண்டு போகிறதுனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை வரப்போகிறது? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.