சென்னையில் பஸ் டே கொண்டாடுவதற்காக கல்லூரி மாணவர்களுக்கு பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களை வழங்கிய புகாரில் முன்னாள் மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜூன் மாதம் புது வண்ணாரப்பேட்டை அருகே மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பஸ் டே கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகாரில் போலீசார் 4 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மாணவர்களுக்கு பட்டாக்கத்தி கொடுத்தது யார் என்று தனிப்படை போலீசார் விசராணை நடத்தி வந்த நிலையில், முன்னாள் மாணவர்கள் 3 பேரை கைது செய்தனர்.