நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக ஆடி மாதத்தில் புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புத்தரிசி பூஜை நாளை அதிகாலையில் நடக்கவுள்ளது. இதனையடுத்து இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான,அச்சன்கோவில் வயலில் விளைந்த நெற்கதிர்கள் பவனியாக சபரிமலை கொண்டுவரப்படுகிறது. நிறைப்புத்தரிசி பூஜை முடிந்து நாளை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.