அசாமில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில டி.ஜி.பி ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.
அசாமின் அப்பர் பகுதி மற்றும் எல்லை பகுதிகளில் ஐக்கிய சுதந்திர முன்னணி விடுதலை பிரிவினர் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர் எனவும், அவர்கள் சுதந்திர தினத்துக்கு முன் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.