கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் அரலக்குப்பே கிராமத்தில் வயலில் நாற்று நட்டு, உழவுப் பணியை மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தந்தை தேவே கவுடா விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், விவசாயம் தனது ரத்தத்தில் ஊறிப்போனது என்றும் தெரிவித்தார்.
நிகழாண்டு பருவமழை போதிய அளவில் கை கொடுத்ததால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்றும் எச்.டி.குமாரசாமி நம்பிக்கை தெரிவித்தார்.