கர்நாடக மாநிலத்தில் காவிரியில்நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது,.
இதனால் மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக உபரி நீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் , தங்களது கால்நடைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.