குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறித்து பிரதமர் . நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்த பெருமைமிகு கவுரவம் இந்தியாவுக்கும் தைமோர் – லெஸ்டேவுக்கும் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.
குடியரசுத்தலைவருக்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்படுவதைப் பார்ப்பது நமக்குப் பெருமையான தருணம். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் இது கருதப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.