தேனியில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் போடிமெட்டு சாலையில் சிறுத்தையின் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
போடிமெட்டு மலைச்சாலையில் அமைந்துள்ள மணப்பட்டி என்னும் இடத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்நிலையில் சாலையின் நடுவே அமர்ந்திருந்த சிறுத்தை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. மேலும், சிறுத்தையின் காலில் காயம் இருந்ததால் வாகனம் ஏதும் மோதியதா எனவும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.