பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் நடிகர் சங்க கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, படபிடிப்பு நிறுத்தக்கூடாது என்பதில் நடிகர் சங்கம் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். “பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.