கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார்.
கொச்சியிலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில், மனோஜ்குமார் என்பவர் பயணிக்க வந்தார்.
அவரது உடமைகளை சிஐஎஸ்எஃப் வீரர் பரிசோதித்தபோது, ‘அதில் என்ன வெடிகுண்டா இருக்கிறது’ என மனோஜ்குமார் ஆவேசமாக கத்திக் கூச்சலிட்டார்.
இதையடுத்து அவரை போலீஸில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் ஒப்படைத்தனர். திட்டமிட்டவாறு ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.