அன்னையரின் பெயரில் மரம் நடுவோம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் மோடி தொடங்கிய இயக்கமான, அன்னையின் பெயரில் மரம் நடுவோம் நிகழ்ச்சி, தமிழக பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம், அவிநாசி தாமரை குளத்தில், விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் .நாகராஜ் அவர்கள் முன்னெடுப்பில், ‘அன்னையரின் பெயரில் மரம் நடுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
நிகழ்ச்சியில் மலேசியா அரசின் துணை அமைச்சர் திரு @mkula_official
அவர்கள், கோவை வடக்கு மாவட்டத் தலைவர் திருமதி சங்கீதா மற்றும் நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என தெரிவித்துள்ளார்.