திருவள்ளூர் அடுத்துள்ள ராமஞ்சேரியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ஒங்கோலைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தனர். இதில், ராமஞ்சேரி என்ற இடத்தில் மாணவர்கள் சென்ற கார் மீது ராஜஸ்தானில் இருந்த வந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
இதில், படுகாயம் அடைந்த சைதன்யா மற்றும் விஷ்ணு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பார்வையிட்டனர்.
காரில் பலியானவர்களின் உடல்களை கடப்பாரை கொண்டு உடைத்து மீட்கும் பணியில் கேகே சத்திரம் போலீசார் ஈடுபட்டனர்.