ராமநாதபுரம் மாவட்டம் ஆதியூரைச் சேர்ந்த கோட்டைமுத்து என்பவர், உயிரிழந்த தனது மனைவிக்காக பல கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுகுடி பகுதியைச் சேர்ந்த கோட்டைமுத்துவின் மனைவி விஜயா உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரது அஸ்தியை ஆதியூரில் உள்ள தனது சொந்த இடத்தில் வைத்து ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பில் கணவர் கோட்டைமுத்து, மணி மண்டபம் கட்டி உள்ளார்.
அதில் 8 லட்ச ரூபாய் செலவில், மனைவிக்கு வெண்கல சிலையும் அமைத்துள்ளார். கோட்டைமுத்துவின் இந்த செயல் பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.