ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோயில் பொருட்களை சேதப்படுத்தியதை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சித்தோடு அருகே கோயில் பொருட்களை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் பொருட்களை சேதப்படுத்தியது குறித்து தட்டி கேட்டதாக தெரிகிறது.
அப்போது தங்கவேலு குடும்பத்தினரை 7 பேர் கும்பல் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் அழைத்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.