சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே பாலத்தில் இருந்து டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்.
தலைவாலில் அருகே கபடி விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்காக டிராக்டரில் 5 இளைஞர்கள் மண் அள்ளி சென்றுள்ளனர்.
புனல்வாசல் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டரை ஒட்டி சென்றவர் சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.