தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக திமுக எம்.பி. மக்களவையில் கேள்வி எழுப்பிய சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்களவையில் ஸ்டார் கேள்விகளின் பட்டியலின் போது, ஈரோடு திமுக எம்.பி., பிரகாஷ், தமிழகத்தில் விவசாயிகள் படும் இன்னல்கள், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பிருந்தார்.
இதனால் திமுக மற்றும் மூத்த எம்.பி.க்ககள், எம்.பி.பிரகாஷ் மீது கடும் ஆத்திரமடைந்தனர். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல் நாடாளுமன்றத்திலேயே ஊர்ஜிதமாகி விடுமோ என அச்சப்பட்ட திமுக மூத்த எம்.பி.,க்கள் புதிய எம்.பி. பிரகாஷை வரவழைத்து கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.
புதுமுக எம்.பி.யான பிரகாஷை நாள் முழுதும் சபை பக்கம் வராமல் திமுகவினர் பார்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.