திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 18-வது யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பத்து பிரிவுகளின் கீழ் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பையும், சான்றிதழும் பரிசாக வழங்கப்பட்டன.