திருப்பூரில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மண்டல தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கணக்கம்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்” என்ற பிரகடன அறிக்கையை அண்ணாமலை வெளியிட, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, கருப்பு முருகானந்தம், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.