தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனால், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு சட்டசபையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.