வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் இறுதிச்சடங்கு டெல்லியில் நடைபெற்றது.
முன்னாள் வெளியுறவு அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நட்வர் சிங் உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 93. அவரது இறுதிச் சடங்கு டெல்லி லோதி ரோடு இடுகாட்டில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.