பீகார் மாநிலம் பாட்னாவில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
தேர்தல் முடிவு வெளியாகும் முன் கலந்தாய்வு நடத்த கோரி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
இதற்கு அவர்கள் செவிசாய்க்காததால், போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர்.