வங்கதேசத்தில் உள்ள போர் நினைவுச்சின்னத்தை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
1971-ம் ஆண்டு போரின் போது, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததை சித்தரிக்கும் வகையில் இந்த போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.
விடுதலையை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை காங்கிரஸ் எம்பி சசி தரூர் தாது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய எதிர்ப்பாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.