வங்கதேசத்தில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து, அமெரிக்காவின் Houston நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்களும், வங்கதேச வம்சாவளியை சேர்ந்த இந்துக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் ‘Hindu Lives Matter’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளை ஏந்தி இருந்தனர். சிறுபான்மையினர் மீதான தாக்குதலைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.