தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத மரங்கள் ராஜவாய்க்கலை முற்றிலும் அடைத்துள்ளதால் குளங்களுக்கு நீர் சென்று சேர்வது தடைபட்டுள்ளது.
இதற்கிடையே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொட்டக்குடி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.