இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக படகு மூலம் கடத்திய நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல்காரர்கள் தங்கத்துடன் மதுரையை நோக்கி காரில் சென்றபோது திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே வைத்து மடக்கிப் பிடித்தனர்.
இது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த சேக் சதக் மற்றும் சாதிக் அலி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.