வரும் அக்டோபர் மாதம் முதல் விசா கட்டணங்களை உயர்த்துவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
நியூசிலாந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையும், அதற்காக விசா விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், விசா கட்டண உயர்வு வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு குடிவரவுத்துறை அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட், தெரிவித்துள்ளார்.