டெஸ்லாவின் மாடல் 3 காரை முன்பதிவு செய்து பல ஆண்டுகளாகியும் கார் விற்பனைக்கு வராததால் செலுத்திய பணத்தை இந்தியர்கள் பலர் திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டில் எலான் மஸ்க் டெஸ்லா மாடல் 3 காரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து ஏராளமான இந்தியர்கள் முன்பதிவு தொகையாக ஆயிரம் டாலர்களை செலுத்தினர். ஆனால் தற்போது வரை முன்பதிவு செய்யப்பட்ட கார் விநியோகிக்கப்படாததால், செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு எலான் மஸ்க்கை வலியுறுத்தியுள்ளனர்.