வங்கதேச ஆட்சி கவிழ்ந்ததின் பின்னணியில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை என வெள்ளை மாளிகை ஊடக செயலர் கரீன் ஜீன் பியரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா, அந்நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், வங்கதேச சிறுபான்மையின மக்களான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை ஊடக செயலர் கரீன் ஜீன் பியரி, வங்கதேசத்தில் நிகழும் சம்பவங்களுக்கு அமெரிக்காதான் காரணம் என கூறுவது தவறு என கூறினார். மேலும், வங்கதேசத்தின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.