பதஞ்சலி நிறுவனம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம், மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதாக, இந்திய மருத்துவர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான விளம்பரங்கள் எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று பாபா ராம்தேவ் தரப்பு உறுதிமொழியை சமர்ப்பித்தது. இதனையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.