இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி இருந்தது.
அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 692 புள்ளிகள் சரிவடைந்து 78 ஆயிரத்து 956 புள்ளிகளாகவும், தேசியப்பங்குச் சந்தை குறியீடான நிப்டி 208 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 139 புள்ளிகளாக வர்த்தகமானது.