சுதந்திர தினத்தை முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் மூவர்ண கொடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பேரணி நடைபெற்றது.
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுவோம் என பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அகமதாபாத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது.
இதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுவோம் என்ற பிரதமர் மோடியின் அழைப்பானது வெறும் தேசபக்தியை மட்டும் வெளிப்படுத்தவில்லை என்று கூறினார்.
மாறாக, வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான அறைகூவல்தான் பிரதமர் மோடியின் அழைப்பு என அமித் ஷா குறிப்பிட்டார்.
அந்த வகையில், ஆகஸ்ட் 15-இல் வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள், வாகனங்கள் என அனைத்திலும் தேசிய கொடியேற்ற வேண்டுமென கூறிய அவர், எந்தவொரு கட்டடமும் இதிலிருந்து விடுபடக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.