ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன், கடந்த 7ம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில், நீதிமன்றம் 4 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.