நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, ‘இல்லந்தோறும் தேசியக்கொடி’ என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் மத்திய அமைச்சர் டாரக்டர் எல்.முருகன், தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
“வீரமும் தியாகமும் ஒருங்கிணைந்து நாம் பெற்ற சுதந்திரத்திற்கு அடையாளமாக விளங்குவது நமது ‘மூவர்ணக் கொடி’ எனவும், “தேசத்தின் உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி வைத்துள்ள இத்தகு தேசியக் கொடியினை, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் ஏந்தி கொண்டாடுவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.