கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
லிங்காபுரம் பகுதியில் உள்ள உயர்மட்ட பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் மூழ்கியது.
இந்த நிலையில் அப்பகுதி மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது 80 அடி ஆழம் கொண்ட காந்தையாற்றை பரிசல் மூலமாக கடந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.