செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தின் போது அதிகாரிகள் செல்போனில் மூழ்கிய அவலம் அரங்கேறியுள்ளது.
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்று கொண்டிருந்தார்.
அப்போது சில அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ளாமல் செல்போன் பார்த்தவாறு அலட்சியமாக செயல்பட்டனர்.